Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘பன்னீர் கலந்து மிக்சர் செய்வது எப்படி?’- செஃப் வெங்கடேஷ் பட்

ஜல்லிக்கட்டு


ல்லிக்கட்டு பரபபரப்புக்கு நடுவில் பேசப்படும் ஹாட் ரெசிப்பி  மிக்சர். மிக்சர் சாப்பிடுகிறோமோ, இல்லையோ அது எப்படி தான் தயாராகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வோமா தோழமைகளே!

‘’கடலை மாவுடன் மற்ற மசாலாப் பொருட்கள் சேராமல் மிக்சர் இல்லை. அப்படிதான் ஜல்லிக்கட்டும். மாணவர்களின் எழுச்சி, வேகம், சக்தி... இதெல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் எழுச்சியாக மாறி இருக்கு. இந்த நேரத்துல வெறுமனே மிக்சர் சாப்பிடாம, கேள்விகளை எழுப்பும் அந்த குறியீட்டு உணவு எப்படி தயாராகுதுனு பாப்போம்’’ என சரசரவென மிக்சர் செய்முறையை தருகிறார் செஃப் வெங்கடேஷ் பட்.

வெங்கடேஷ் பட்

இதெல்லாம் தேவைங்க!

கடலை மாவு -  500 கிராம்
பன்னீர் - 4 சொட்டு
மிளகாய்ப் பொடி - 50 கிராம்
பெருங்காயத்தூள் - 20 கிராம்
உப்பு - 25 கிராம்

இந்த ஐந்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். பிறகு முறுக்குக் குழலுடன்  பொருந்தும் காரச்சேவு, ரிப்பன் பக்கோடா, ஓமப்பொடி ஆகிய மூன்று வகை அச்சுகளையும் எடுத்துக் கொள்ளவும். மாவை சம அளவு பிரித்து கொண்டு ஒவ்வொரு அச்சிலும் காரச்சேவு, ரிப்பன் பக்கோடா, ஓமப்பொடி ஆகியவற்றை எண்ணெயில் வார்த்துப் பொறித்து தனியாக எடுத்து கலவையாக வைத்துக் கொள்ளவும்.

மிக்சர்

அந்த கலவையில் என்னவெல்லாம் சேர்க்கலாம் என்று பார்ப்போமா?

உடைத்த கடலை - 100 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
அவல் - 100 கிராம்
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 50 கிராம்
கரிவேப்பிலை - 25 கிராம்

இதையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டு பிறகு ஓமப்பொடி, காரச்சேவு, ரிப்பன் பக்கோடா கலவையுடன் சேர்த்து கலக்கவும். இத்துடன் சிறிது மஞ்சள் தூள், சர்க்கரை 20 கிராம், பெருங்காயத்தூள் 20 கிராம் சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது சூடான சுவையான மிக்சர் தயார்.

ஆக, இந்த சூப்பர் ஸ்பெஷல் மிக்சர் தமிழகம் முதல் டெல்லி வரை நிகழும் குளிருக்கு பொருந்தும் உணவாகவே பேசப்படுகிறது.

-பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close