Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேபி சிட்டரை நியமிக்கும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! #GoodParenting

புன்னகையுடன் உறங்கும் பேபி குழந்தை

ன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் குழந்தையை பராமரிக்க பேபி சிட்டர் தேவைப்படுகிறார்கள். அவர்களை தேர்வு செய்வதற்கு முன்பும், செய்த பின்பும் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்குகிறார் சென்னை 'இன்டர்நேஷனல் மேன்பவர் ஆர்கனைசேஷன்' அமைப்பின் நிர்வாகியான புஷ்பா பிரபு.

*  உங்கள் குழந்தைக்கு... உங்கள் ஊரில் உள்ளவர்கள், தெரிந்தவர்களையே பேபி சிட்டராக தேர்வு செய்யுங்கள். அது முடியாதபட்சத்தில் ஏஜென்சிகளை அணுகலாம். நீங்கள் அணுகும் ஏஜென்சி நம்பகத்தன்மை உடையதா, அனுப்பும் நபர்கள் குறித்த விவரங்களை ஒளிவு மறைவின்றி தெரிவிக்கிறதா என்பதை எல்லாம் தீர விசாரியுங்கள்.

* ஏஜன்சிகளை அணுகும் போது, குழந்தைக்கு எப்படிப்பட்ட பேபி சிட்டர் வேண்டும் என்பதை தெரிவியுங்கள். அவர் எந்த வயதில் இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, பேபி சிட்டர் குழந்தையை குளிப்பாட்டுவதில் துவங்கி நீங்கள் வரும் வரை அனைத்தையும் பார்த்துக் கொள்கிறவராக வேண்டுமா, அல்லது பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தையை நீங்கள் வரும்வரை பார்த்து கொள்கிறவரா... என்பதை தெளிவாக தெரிவித்தால் பிரச்னை ஏற்படாது.

*  தேர்வு செய்யும் பேபி சிட்டருடைய ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஐடி ஃப்ரூப், போட்டோ, சாட்சி நபர்கள் இருவரின் ஐடி ஃப்ரூப் ஜெராக்ஸ், முகவரி, போன் நம்பர் உள்ளிட்ட விபரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். முடிந்தவரையில் இந்த ஆவணங்களை அருகில் உள்ள காவல்நிலையத்தில் கொடுத்து சரிபார்த்துக் கொள்ளுதல் நல்லது.

* வீட்டில் குழந்தையின் தாயோ அல்லது உறவினர்களோ இருக்கும்பட்சத்தில் பயப்படத் தேவையில்லை. அதேசமயம் குழந்தையும், பேபி சிட்டரும் மட்டும் தனியாக இருக்கும்பட்சத்தில், வீட்டின் முக்கியமான ரூம்களை லாக் செய்துவிடுங்கள். ஹால், கிச்சன், பாத்ரூம் உள்ளிட்ட அறைகளை மட்டுமே கேர் டேக்கர் பயன்படுத்த அனுமதியுங்கள். குழந்தைகளுக்கு நகைகள் போட வேண்டாம்.  

* வீட்டில் சிசிடிவி கேரமா வைத்திருந்தால், வேலை ஆட்கள் கொஞ்சம் பயத்துடன் வேலை செய்வார்கள். தினமும் வேலைக்குச் சென்ற பிறகு பெற்றோர், பல முறை பேபி சிட்டருக்கு போன் செய்து குழந்தை சாப்பிட்டார்களா, தூங்கினார்களா என விசாரித்துக்கொண்டே இருந்தால், பராமரிப்பாளரும் கவனத்துடன் குழந்தையை பார்த்துக்கொள்வார்.

* குழந்தைக்கு அடிக்கடி புரை ஏற்படுவது, அழுகை வருவது இயல்புதான். ஆனால் அவை எதனால் வருகிறது என்பதை அனுபவமுள்ள பராமரிப்பாளர்களால்தான் கணிக்க முடியும். அதுப்போலவே குழந்தை தினமும் அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்கும் என்பதால் அவற்றை இன்முகத்துடன் சுத்தம் செய்பவராகவும் பராமரிப்பாளர் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் உடல்நலம் கெடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே நம் குழந்தையை, பாராமரிப்பாளர் என்ற நிலையைத் தாண்டி அவர்கள் குழந்தையாக நினைக்கும் பராமரிப்பாளாரைத் தேர்வு செய்ய வேண்டும்.

* பிறந்த 8 மாதத்தில் இருந்து குழந்தை நடைபழக, பேச பழகும். அதனால் குழந்தையுடன் நன்றாக விளையாடி மகிழும் குணம் கொண்ட, ஓரளவுக்கு எழுத படிக்க தெரிந்த பராமரிப்பாளரை தேர்வு செய்வது சிறந்தது. இதனால் குழந்தைக்கு எழுத, படிக்க, கதைகள் சொல்லிக் கொடுக்க... போன்ற பயனுள்ள செயல்களை பராமரிப்பாளரால் செய்ய முடியும்.

* தினமும் காலை அலுவலகம் செல்லும் முன் பராமரிப்பாளரிடம் குழந்தையை ஒப்படைப்போம், மாலை அலுவலகம் முடிந்து வீடு திருப்பியதும் குழந்தையை நம் அரவணைப்பில் பெற்றுக் கொள்வோம். அப்போது குழந்தை, பாதுகாப்பாளரிடம் எந்த அளவுக்கு அட்டாச்மெண்டாக இருக்கிறது என்பதை வைத்து, குழந்தையை பராமரிப்பாளர் எப்படி கவனித்துக் கொள்கிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம். மேலும், பராமரிப்பாளர் குழந்தைக்கு சரியாக கதை சொல்கிறார்களா, நல்ல விஷயங்களை சொல்கிறார்களா என்பதை குழந்தையிடம் தினமும் நாம் பேசிப்பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். குழந்தை முன் பெற்றோர்கள் தவறான வார்த்தைகளையும், கோபமாக பேசிக்கொள்வதையும் செய்யாத பட்சத்தில் குழந்தையிடம் அதுபோன்ற செயல்பாடுகள் தெரிந்தால் கட்டாயம் பராமரிப்பாளர்தான் குழந்தையிடம் தவறான எண்ணங்களைக் கூறுகிறார் என அர்த்தம். அது உண்மைதான் என்பது தெரியவந்தால், உடனே பராமரிப்பாளரை மாற்றுவதே சிறந்தது.

 * குழந்தை சரியாக சாப்பாடு சாப்பிடுகிறார்களா என்பதை சிசிடிவி மூலமும், அவர்களுக்கு எடையின் மூலமும் நாம் தெரிந்து கொள்ள வீட்டிலேயே எடை மெஷினை வைத்து அவ்வப்போது சோதனை செய்யலாம். மேலும் டாக்டரிடம் அழைத்துச் சென்று குழந்தையின் உடல்நலத்தையும் சரிபார்த்துக்கொள்ளலாம்.

* குழந்தை பெற்றோர்களிடம் இருப்பதை விடவும், அதிக நேரம் பேபி சிட்டரிடம் இருக்கிறது என்பதால் குழந்தைகளிடம் பெற்றோர் அரவணைப்பு குறையாமல் பார்த்துக்க வேண்டும். தினமும் காலையிலும், இரவிலும் குழந்தையிடம் பாசமாக அரவணைப்புடன் பெற்றோர் இருக்க வேண்டும்.

* குழந்தை ஃப்ரீ மெச்சூர்ட் பேபி என்றால், இதற்கென சிறப்பு பேபி சிட்டரை நியமிப்பது சிறந்தது.

* தற்போது பெரும்பாலான பெற்றோர் மூன்று மாதத்திலேயே குழந்தையை பேபி சிட்டரின் பராமரிப்பில் விட்டுசெல்கிறார்கள். முடிந்தவரையில் ஆறு மாதங்களாவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பராமரித்து, பின்னர் வேலையாட்களின் பராமரிப்பில் விட்டுச் செல்வது நல்லது.

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close