Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?!' - கஜோலிடம் சிணுங்கிய மகள்!

யது 42 என்று சொன்னால் நம்பமுடியவில்லை. செம ஃபிட் அண்ட் க்யூட் ஆக இருக்கிறார், இரண்டு குழந்தைகளின் அன்பு அம்மா கஜோல். 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் விரைவில் நம்மை சந்திக்கவிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் கஜோலும் அவர் மகள் நைஸாவும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொள்ளும் போஸ்ட்கள், நெட் மக்களுக்கு பொழுதுபோக்காகி இருப்பது லேட்டஸ்ட் நியூஸ்.

தன் மகளுடன் நடிகை கஜோல்

''எனக்கு சோஷியல் மீடியா மேல அவளோ இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா என் மகள் நைஸா தான் நிறைய பேசி, கன்வின்ஸ் செய்து இங்க அழைச்சுட்டு வந்தா. 'சினிமாவுல இருக்கீங்க. கண்டிப்பா நீங்க இன்ஸ்டாகிராம்ல இருக்கணும்'னு சொன்னா. 'ஓ.கே. ஆனா நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்'னு அவகிட்ட கேட்டுக்கிட்டேன்' என்ற அறிமுக போஸ்ட் உடன் இன்ஸ்ட்ராகிராமுக்கு வந்தார் கஜோல்.

தன் கணவர் அஜய் தேவ்கனுடன், நடிகை ஶ்ரீதேவியுடன், தன் அம்மாவுடன் என தன் புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்ட்ராகிராமில் போஸ்ட் செய்ய ஆரம்பித்த கஜோல், அதில் அதீத இன்ட்ரஸ்ட் காட்ட ஆரம்பித்தார். 13 வயதாகும் அவரின் மூத்த மகள் நைஸா, 6 வயதாகும் அவரின் இளைய மகன் யக்... இருவரின் புகைப்படங்களும் அதில் அடக்கம்.

                                                             தன் மகள் நைஸாவுடன் கஜோல்

சமீபத்தில், மூன்று விதமான ஃபேஷியல் எக்ஸ்பிரஷன்களில் தன் போட்டோக்களை போஸ்ட் செய்த கஜோல், 'என் குழந்தைகளை நான் ஒற்றுமையாகப் பார்க்கும்போது...' என்று அந்தப் புகைப்படங்களுக்கு கேப்ஷன் போல சொல்ல, டீன் ஏஜ் நைஸாவுக்கு அது பிடிக்கவில்லை. 'மாம்ம்ம்ம்ம்... ஏன் ஓவரா பண்றீங்க?!' என்று சிணுங்கினார்.

                                                                கஜோல் தன் குழந்தைகளைப் பற்றி போட்ட இன்ஸ்டாகிராம் போட்டோ
அதேபோல, தன் அம்மாவுடன் தன் மகள் நைஸா நிற்கும் புகைப்படத்தை கஜோல் பதிவிட, 'மாம்ம்ம்ம்... என்ன போட்டோ இது? நான் நல்லாவே இல்ல' என்று  சிணுங்கினார். ஓவர் இன்ட்ரஸ்டில் தன் அம்மா பதிவிடும் தன் படங்களால் கடுப்பான நைஸா, 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா' என்று சலித்துக்கொள்ள, இந்த ஸ்டார் அம்மா - பெண் ட்ரால் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது.

'வீட்டிலும் கஜோலை அவர் மகள் வம்பிழுப்பதும், கஜோல் தன் பெண்ணை கிண்டல் செய்வதும் வாடிக்கைதான்' என்கிறார்கள் தேவ்கான் வீட்டுக்கு நெருக்கமானவர்கள்.

அட, நம்ம வீட்டிலும் நடக்கும் கதைதானே இது?!

 

- அதிதி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close