Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களின் வைரல் வீடியோ... மல்லுக்கட்டும் இணையம்!

வைரல் வீடியோ

மூன்று பெண்கள்...இரண்டு பெண் பாடகர்கள்...ஒரு பிரபல பாடல்... இவர்கள்தான் இணைய வைரலுக்கு காரணம். சமீபத்தில் ‘ஊர்வசி... ஊர்வசி... டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடலுக்கு உல்டா  வரிகள் சேர்த்து வைரல் வீடியோவாக்க வைத்தார்கள் 'அனிகா வெர்மா' அண்ட் கோ. ஆனால், கடந்த  23-ஆம் தேதி வெளியான இந்த வீடியோ பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகிக்கொண்டு இருக்க, அதற்கு எதிர்வினையாக, அந்த வீடியோ பதிவில் நடித்தவர்களை ஆபாசமாகவும், வெறுப்பாகவும் சிலர் இணையத்தில் திட்டி ட்ரால் செய்திருக்கிறார்கள். வீடியோ பதிவை இயக்கிய பெண்களிடம் பேசினோம். 

''23 வருஷத்துக்கு முன்னாடி 'காதலன்' தமிழ் (இந்தியில் ஹம் சே ஹே மூகபுல்லா ’Hum Se Hai Muqabala')  திரைப்படத்தில் வெளியான 'ஊர்வசி... ஊர்வசி... டேக் இட் ஈஸி ஊர்வசி'  பாட்டு இளைஞர்களை ஈர்க்குற விதத்தில் அமைஞ்சிருந்தது. சமீபத்துல கூட ஏ.ஆர்.ரஹமான் சாரே, அந்த பாட்டோட டியூனுக்கு புது வரிகள் எழுதுங்கனு ஒரு போட்டியா அறிவிச்சார். அதுல ஜெயிச்ச நாலு பேருமே ஆண்கள்தான். ஒரு பொண்ணு பேரை வைச்ச பாட்டுக்கு ஆண்களே பாடல் வரிகளை எப்படி தீர்மானிக்கிறாங்கனு யோசிச்சோம்.

எங்களின் ‘பிரேக்த்ரூ’ (Breakthrough) அமைப்பு, கடந்த 17  ஆண்டுகளாக வட இந்தியாவில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளை கண்டித்தும், ஆணாதிக்க போக்குகளை எதிர்த்தும், தொடர்ந்து செயல்பட்டுட்டு வர்றோம். எங்கள் அமைப்போட ஒரு பகுதியா ஊர்வசி பாட்டை ‘டோன்ட் டேக் இட் ஈஸி ஊர்வசி’ (Don't Take it Easy, Urvasi) என்ற வரிகளுடன், காலங்காலமாக பெண்களை கேலிப்பொருளாகவும், போகப்பொருளாகவும் பார்க்கப்படுவதை உடைத்து ஏறியுங்கள் என முழு பாட்டையும் பாடினோம். 

அந்த பாடல் வரிகளுக்கு இடையே கொஞ்சம் தமிழ் வரிகளையும் சேர்த்தோம். தமிழ் வரிகளுக்குதானே முதன்முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ரிமீக்ஸ் செய்யும்போது, இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள்தான், அந்த பாடலுக்கு கூடுதல் சிறப்பை தரும். நாங்கள் நினைத்தபடி பாடல் சூப்பர் ஹிட்" என்றவர்களிடம் அவர்களை இணைய சமூகம் ட்ரால் செய்ததைப் பற்றி கேட்டோம்.

''வீடியோவை வெளியிட்ட முதல் இரண்டு நாட்கள் எங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இதில், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களே நடித்திருந்தார்கள். வீடியோ வெளியான இரண்டு நாட்களுக்குள், சமூகவலைத்தளத்திலும், இணையத்திலும் பத்து லட்சத்துக்கும் மேலாக பகிரப்பட்டது. ஆனால், அதன் பிறகு, நாங்கள் வெளியிட்டிருந்த  யூ-டியூப் இணையத்தில் அதில் நடித்திருந்தவர்களை கேலிசெய்யும் வகையிலும், ஆபாசமாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்திருந்தார்கள். முதலில், நாங்கள் இதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால், கடந்த சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமையன்று, அந்த வீடியோ பதிவில் நடித்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில், சிலர் ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளனர். இதனால், இத்தகைய செயல்களை கண்டித்து, நாங்கள் முகநூலில் எழுதியிருக்கிறோம்.

எங்களின் வீடியோ பதிவை பார்க்க பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அதில் குறை இருந்தாலோ, நாகரிகமாக சொன்னால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அதற்கு பதிலாக இப்படி அநாகரிகமாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இத்தகைய கருத்துகளை உடைக்கதானே, நாங்கள் இந்த வீடியோவை இயக்கினோம்?” என்று  கேள்வி எழுப்புகிறார்கள்.

டோன்ட் டேக் இட் ஈஸி ஊர்வசிகளே...

- எம்.ஆர்.ஷோபனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close