Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களுக்கான நலத்திட்டங்களும்.... திட்டத்தை சிறப்பிக்கும் சாதனைப் பெண்களும்! #CelebrateWomen

சாதனைப் பெண்கள்

மிழகத்தில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் பலவற்றிலும் அத்திட்டங்கள் சார்ந்த போராட்டக் களங்களில் போராடிய பெண் போராளிகளின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தமிழகப் பெண்கள் நலத்திட்டங்களைத் தாங்கி நிற்கும் சாதனைப் பெண்களைப் பற்றியும், அவர்கள் பெயரைத் தாங்கியிருக்கும் நலத்திட்டங்களையும் தெரிந்துகொள்வோம்.

ஈ.வே.ரா.மணியம்மையார்:
தமிழ் இலக்கிய பட்டம் பெற்று அரசியல் மேடைகளில் தமிழ் மொழியில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டு, பெரும் பெண்கள் படையைத் திரட்டியவர். ஈ.வே.ரா.மணியம்மையார்திராவிடர் இயக்கத் தலைவர்களில் ஒருவரான அண்ணல் தங்கோவினால் 'அரசியல் மணி' எனப் பெயர் சூட்டப்பட்டு, பின்நாட்களில் மணியம்மை என அழைக்கப்பட்டார். 1949-ம் ஆண்டு பெரியாருடன் திருமணம் முடிந்து, அவருடனே இணைந்து பல போராட்டக்களத்திலும், அரசியல் மேடைகளிலும் முழங்கினார். சுயமரியாதை மாநாடு, திராவிடர் கழக மாநாடு, திராவிட மகளிர் மாநாடுகளில் இவரது பேச்சும், போராட்டக் குணமும் பல பெண்களை வீட்டைவிட்டு வெளியே வந்து போராடவைத்தது. குறிப்பாக, திராவிடர் கழகத்தின் அறிக்கைகளும், செய்திகளும் இவரது கைவண்ணத்திலேயே வெளிவந்தன. இந்தி எதிர்ப்புப் போராட்டம்,  நெருக்கடி நிலை காலங்கள் என பல முறை சிறை சென்றார். பெரியாரின் மறைவுக்குப் பின்னர், திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நிர்வகித்தார். 1981-ம் ஆண்டு முதல் இவரது பெயரில் 'ஏழை விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்' வழங்கப்பட்டு வருகிறது.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார்:
தர்மாம்பாள் அம்மையார் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது, மற்றவர்களுடன் சகஜமாக பேசக் கூடாது என்ற பாகுபாடுகளைப் பெண்கள் அதிகம் சந்தித்த காலக்கட்டம் அது. 1938-ம் ஆண்டு, சென்னையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே பங்கேற்ற 'தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு' நாட்டையே பரபரப்பாக பேசவைத்தது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நிகழ்த்தியவர், டாக்டர் எஸ்.தர்மாம்பாள். பல சமூக ஆர்வலர்களையும் அழைத்து பேசவைத்து, அந்த மாநாட்டை பெற்றிபெறச் செய்தார்.  உயர்கல்வி கற்க வழிவகை அதிகம் இல்லாத அந்தக் காலத்திலேயே சித்த மருத்துவம் பயின்று, சென்னையில் மருத்துவமனை ஒன்றை நிறுவி, ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவைக் கொடுத்தார். விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணம், பெண் கல்வி மற்றும் தமிழ் மொழிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் தன் வாழ்வில் பெரும் பகுதியை அர்ப்பணித்தார். 1975-ம் ஆண்டு முதல் இவரது பெயரில் 'விதவை மறுமண நிதியுதவித் திட்டம்' வழங்கப்பட்டு வருகிறது.

 

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி:
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவராக புகழ்பெற்றவர் டாக்டர்டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முத்துலட்சுமி ரெட்டி. பெண் உரிமைப் போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ் மொழி வளர்ச்சி போராட்டங்கள், மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகளுக்கு எதிராக முன்னின்று பங்கேற்றார். உலக அரங்கில் பல நாடுகளில் நடைபெற்ற பெண்கள் மாநாடுகளில் பங்கேற்று, பெண்கள் முன்னேற வேண்டும்; அவர்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் எனத் தொடர்ந்து பேசி வந்தார். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்து, பெண்களைத் தங்கள் உரிமைகளுக்குப் போராட ஊக்கப்படுத்தினார். மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து, திருமணங்களை நடத்திவந்த தன் கணவர் டி.சுந்தரரெட்டியுடன் இணைந்து பங்காற்றினார். மக்கள் மேடைகளில் முழங்கியதைத் தவிர, பல்வேறு அரசுப் பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டார். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர், இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமைகளைப் பெற்றவர். சட்டமன்ற துணைத் தலைவராக பணியாற்றியபோது, தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களைத் தடைச் செய்யும் சட்டம் உள்ளிட்ட பெண்களுக்குப் பயனுள்ள பல சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்தார். ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க, சென்னை அடையாறில் 'அவ்வை இல்லம்' ஒன்றை தோற்றுவித்தார். பல வகையிலும் நிதி திரட்டி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவி, இன்று வரை ஏழைகளுக்கு சிகிச்சைக் கிடைக்கக் காராணமாக இருக்கிறார். அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட கலப்புத் திருமண நிதியுதவித் திட்டத்துக்கு 2011-ம் ஆண்டில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயர் சூட்டப்பட்டது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்: 
சுதந்திரம் கிடைக்காத காலக்கட்டத்தில் பெண்களுக்கான பல உரிமைகளும் மறுக்கப்பட்ட சமயத்திலும், துணிந்து ஏராளமான பெண் உரிமைப்மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போராட்டங்களில் ஒலித்த பெண்கள் குரலில் முக்கியமானவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் கிராமத்தில் பிறந்தவர். சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல் செயற்பாட்டாளர் என பன்முகங்களோடு  பணியாற்றியவர். பெண்களுக்கு எதிரான தேவதாசி முறை ஒழிய கடுமையாக போராடியதுடன், தாசிகளின் அவலநிலையை தன் சுயசரிதை புதினத்தின் வாயிலாக வெளிச்சம் பாய்ச்சினார். இவரது அளப்பறிய பங்கு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற பெரும் வழிவகுத்தது. 1937 - 1940 காலக்கட்டங்களில் பெரும் கொந்தளிப்புடன் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெற்று ஆறு வாரங்கள் சிறை சென்றார். 1989-ம் ஆண்டு முதல் இவரது பெயரில், ஏழைப் பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டமும் வழங்கப்பட்டு வருகிறது.

- கு.ஆனந்தராஜ்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close