Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களுக்கு எதிரான ட்வீட்டுகளை நீக்குவதில் தாமதம் காட்டுகிறது ட்விட்டர்:  பிரிட்டிஷ் எம்.பி குற்றச்சாட்டு 

யவெட்டி கூப்பர்


பிரபல சமூகவலைதளமான ட்விட்டர், பெண்களுக்கு மிரட்டல் விடுக்கும் ட்வீட்டுகளையும், பாலியல் ரீதியில் பெண்களைத் தாக்கிப் பேசும் ட்வீட்டுகளையும் தனது வலைதளத்திலிருந்து நீக்குவதற்கு மிகவும் தாமதம் காட்டுகிறது என்று பிரிட்டிஷ் பெண் எம்.பி யவெட்டே கூப்பர் (Yvette Copper) குற்றம்சாட்டியிருக்கிறார்.

பிரிட்டிஷ் எம்.பி யவெட்டே கூப்பர், ட்விட்டரில் உலவும் பெண்களை பாலியல் ரீதியில் தாக்கிப் பேசும் ட்வீட்டுகளுக்கு எதிராக “ரீக்லைம்  தி இன்டெர்நெட்’ (Reclaim the internet) என்ற விழிப்புஉணர்வு பிரசாரத்தைச் செய்துவருகிறார். 

“செய்திகளைத் தெரிவிப்பதிலும், விவாதங்களை ஊக்குவிப்பதிலும், உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை மக்களுக்குத் தெரிவிப்பதிலும் ட்விட்டர் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், ட்விட்டர் மூலம் பெண்களுக்கு அனுப்பப்படும் பாலியல் ரீதியிலான மிரட்டல் ட்வீட்டுகள், இனவெறி கருத்துகளை அகற்றுவதற்கும் இந்த நிறுவனம் மிகவும் தாமதம் காட்டுகிறது. இதனால், இத்தகைய கருத்துகளை வளர்ப்பதற்கு ட்விட்டர் ஒரு தளமாகவே ஆகிவிட்டது' என்று குற்றம்சாட்டியிருக்கிறார். 

கூப்பர் மற்றும் அவரது குழு, இதுகுறித்த ஆய்வு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. மேலும், இதுபோன்ற எதிர்மறையான கருத்துகளை நீக்குவதற்கு ட்விட்டர் எத்தகைய அளவுகோல் மற்றும் கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது என்றும் அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்கிறார் கூப்பர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close