Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.1 ஆகப் பதிவு!

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோ நாட்டில், இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

மெக்ஸிகோ நாட்டில், இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம், ஒட்டுமொத்த மெக்ஸிகோவையே அதிகப்படியாகத் தாக்கியுள்ளது. சுனாமி வருவதற்கான வாய்ப்பு என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெக்ஸிகோவின் பிஜிஜியப்பன் நகரை 123 கி.மீ தூரத்துக்கு தென் மேற்கில், சுமார் 33 கி.மீ ஆழத்துக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. பாதுகாப்பு மற்றும் மீட்புப்பணி அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் மக்கள் பலரும் வீட்டை விட்டு தற்காலிகமாக வெளியேறிவருகின்றனர். வலிமைவாய்ந்த நிலநடுக்கம் என்பதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மெக்ஸிகோவின் கடலோர எல்லையில் சுமார் 3 மீ உயரத்துக்கு அலைகள் எழுந்துவருகின்றன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close