Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இர்மா' புயல் எச்சரிக்கை..! ப்ளோரிடா மாகாணத்திலிருந்து 50 லட்சம் மக்கள் வெளியேற்றம்

அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'இர்மா சூறாவளி' இன்று ப்ளோரிடா மாகணத்தை கடக்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 லட்சம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள இர்மா புயல், இந்த நூற்றாண்டின் பெரும் புயலாக கருதப்படுகிறது. பலத்த மழையையும் 290 கி.மீ வேகத்துக்கு புயல் காற்றையும் கொண்டு இந்தப் புயல் கரீபியன் தீவுப் பகுதிகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூறாவளியால் போர்டோ ரிகா, கியூபா, விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட நாடுகள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. தற்போது அந்தப் புயல் அமெரிக்கா நோக்கி நகர்ந்து செல்கிறது.

இந்திய நேரப்படி இன்று காலை 'இர்மா' ப்ளோரிடா மாகணத்தைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 55 லட்சம் பேர்வரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் உள்ளனர். இதுகுறித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ள ப்ளோரிடா மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட், 'மக்கள் உடனடியாக ப்ளோரிடா மாகணத்தை விட்டு வெளியேறவேண்டும்.

புயல் தாக்க தொடக்கபின் பாதுகாப்பு படையினரால் உங்களைக் காப்பாற்ற முடியாது. புயல் ப்ளோரிடாவின் மேற்குப் பகுதி வழியாக தாக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிலவும் புயல் காற்று மற்றும் கன மழையின் காரணமாக மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close