Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேசியப் பள்ளியில் பயங்கர தீ விபத்து - மாணவர்கள் உட்பட 24 பேர் பலி

மலேசியாவில் டாஃபிஸ் எனும் இஸ்லாமியப் பள்ளியில் இன்று காலை நடந்த தீ விபத்தில் 22 மாணவர்கள் உட்பட 24 பேர் பலியாயினர். 


மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் குரான் கற்றுக் கொடுக்கும் இஸ்லாமியப் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் பல மாணவர்கள் தங்கிப் பயின்று வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  இந்த தீவிபத்தில் முதலில் 25 பேர் பலியானதாகத் தெரிவிக்கபட்டது. எனினும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு இதுவரை 22 மாணவர்களும் 2 வார்டனும் பலியானதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

பலியான மாணவர்கள் அனைவரும் 13 முதல் 17 வரை வயது கொண்டவர்கள். இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பள்ளியின் முன் குவிந்துள்ளனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close