Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”அணு ஆயுத உற்பத்தியைத் தொடர்வோம்”: தொடரும் வடகொரியாவின் மிரட்டல்கள்!

’இலக்கை எட்டும் வரை அணு ஆயுத உற்பத்தியைத் தொடர்வோம்’ என வடகொரியா பகிரங்கமாகவே அறிவித்துள்ளது.

வடகொரியா

தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வடகொரியாவின் செயல்கள் உள்ளன. சர்வதேச அளவிலும், ஐ.நா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும், தன் நிலைப்பாட்டை இதுவரை வடகொரியா மாற்றிக்கொள்ளவே இல்லை. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தும் அது கண்டுகொள்ளவில்லை. ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா நேற்று மீண்டும் ஓர் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து உலக நாடுகளுக்குப் பதற்றத்தை அளித்துவரும் வடகொரியா மீது, ஐ.நா மூலம் அமெரிக்கா பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல தடைகளை விதித்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். அதில், “அணு ஆயுத உற்பத்தியில், நிர்ணயித்த இலக்கை எட்டும் வரையில் உற்பத்தியைத் தொடர்வோம்” எனப் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close