Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லண்டன் குண்டுவெடிப்புச் சம்பவம்: ஒருவர் கைது!

மேற்கு லண்டனில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டன் குண்டுவெடிப்பு

மேற்கு லண்டனில், பல முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்பட்டுவருகிறது, சுரங்க ரயில் போக்குவரத்து. கடந்த 15-ம் தேதி இந்த ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்தனர். லண்டன் நேரப்படி காலை 8.20 மணியளவில், பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் பயங்கரச் சத்தத்துடன் அங்கிருந்த மர்மப் பொருள் ஒன்று வெடித்தது. இதனால் அந்தப் பகுதியில் இருந்த பயணிகள் அலறியடித்து ரயிலிலிருந்து இறங்கி ஓடினர். பலர் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் சரிந்தனர்.

உடனடியாக பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள், பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்திலும் குண்டு வைக்கப்பட்ட அந்த ரயிலிலும் சோதனை நடத்தினர். அப்போது, வெடிக்காத நிலையில் இருந்த குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ரயில் குண்டுவெடிப்புக்குத் தற்போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த இயக்கத்தின் செய்தி நிறுவனம், இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையதாக 18 வயது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த சுரங்கப் பாதையின் அருகிலுள்ள டோவர் துறைமுகப் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடிக்கொண்டிருந்ததாகக் கூறி போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close