Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வட கொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியும்!' : ட்ரம்ப் நம்பிக்கை!

உலக நாடுகள் அனைத்தையும் பகைத்துக் கொண்டு வடகொரியா தொடர் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'வடகொரியா விடுக்கும் அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்

தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வடகொரியாவின் செயல்கள் உள்ளன. சர்வதேச அளவிலும், ஐ.நா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும், தன் நிலைப்பாட்டை இதுவரை வடகொரியா மாற்றிக்கொள்ளவே இல்லை. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தும் அது கண்டுகொள்ளவில்லை. ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா இரண்டு நாள்களுக்கு முன்னர் மீண்டும் ஓர் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'வடகொரியா விடுக்கும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நமது மக்களையும் தேசத்தையும் எவ்வித அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்க முடியும்' என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close