Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’21-வது வயதில் எல்.கே.ஜி, 15 வயது மகளுடன் மேல்நிலைப் பள்ளி!’ - ஆச்சர்யப்பட வைக்கும் சூடான் பெண்

sudan refugee

 

சூடான்  நாட்டு அகதியான  'ஹோசனா அப்துல்லா' சிறுவயது முதலே கல்விகற்க மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். ஆனால், அவருக்கு காலமும் சூழ்நிலையும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இருந்தும்  'தான் கல்வி கற்க வேண்டும்' என்ற வைராக்கியத்தை மட்டும் மனதில் கொண்டிருந்தார் ஹோசனா.

பல வருடங்களுக்குப் பிறகு கல்வி கற்கும் வாய்ப்பு "அகதிகளுக்கான உயர் ஆணைய ஐக்கிய நாடுகள் சபை" (UNHRC) மூலம் கிடைத்தது. அதைப் பயன்படுத்திக்கொண்ட ஹோசனா, தனது 21-வது வயதில் எல்.கே.ஜி-யில் சேர்ந்தார். அதைப்பற்றிப் பேசிய அவர் "பள்ளியில் நான் சிறுபிள்ளைகளுடன் அமர்ந்திருப்பேன். அவர்கள் என்னை ஒரு ஆச்சர்யப் பொருளாகக் கண்டனர். ஆனால், நான் அதை பொருட்படுத்தவில்லை. எனது மனம் 'கல்வி வேண்டும்' என்பதில் உறுதியாக இருந்தது. எனவே மற்றவர்கள் கேலியாக பேசுவதையும் நான் கண்டுகொள்ளவில்லை. கல்வி கற்பதிலேயே எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்" என்று ஆர்வத்துடன் பேசியுள்ளார். ஹோசனாவின் இந்த வீடியோவை UN Refugee agency ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close