Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆங் சாங் சூகி-க்கு ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை!

’மியான்மரில், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் வன்முறைகளைத் தடுத்துநிறுத்த இதுவே கடைசி வாய்ப்பு’ என மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சாங் சூகி-க்கு, ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா பொதுச்செயலாளர்

மியான்மரில், ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தொடர்கிறது. குழந்தைகள், பெண்கள் என வித்தியாசமின்றி, அங்கு நடக்கும் படுகொலைகள் உலகையே அச்சத்தில் தள்ளியுள்ளது. இதனால், அங்கிருந்து தப்பித்துவரும் பல ரோஹிங்கிய முஸ்லிம்கள், வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துவருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

இதற்கு, உலகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. இந்நிலையில், ஐ.நா தலைமையகத்தில் மியான்மர் விவகாரம் பற்றிப் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் வன்முறை வெறியாட்டங்களை, மியான்மர் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உலகின் பல்வேறு தலைவர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தும், மியான்மர் அரசு செவிசாய்க்க மறுக்கிறது. நேற்று முன்தினம், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல்குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறுகையில், “மியான்மர் அரசு மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். தொடரும் வன்முறைகளுக்கு முடிவு கட்டி, அங்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய ராணுவத் தாக்குதல்களைத் தடுத்துநிறுத்த மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சாங் சூகி-க்கு இதுவே கடைசி வாய்ப்பாகும். பின்னர், இப்பிரச்னையின் தீவிரம் எந்தளவு இருக்கும் என்பதைக் கணிக்க முடியாது” என எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close