Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்: முடிவில் மாற்றமில்லை என அமெரிக்கா திட்டவட்டம்!

’பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவதாக எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாரீஸ் ஒப்பந்தம்

2015-ம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம்குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) இயன்ற அளவு குறைப்பது. அதாவது, வளர்ச்சியின் பெயரால், பொருளாதார முன்னேற்றத்தின் பெயரால், சூழலியலைக் கெடுக்கும் தொழிற்சாலைகளை நெறிமுறைப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றார்ப்போல தேசங்கள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். சீனாவும் அமெரிக்காவும்தான் உலகத்திலேயே அதிக அளவு கரியமில வாயுவை உமிழும் தேசங்கள். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்கா இதற்கு ஒப்புக்கொண்டது.  

பின்னர், ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டதும், "இந்த ஒப்பந்தம், அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும்" என அறிவித்தவர், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். சமீபத்தில், வெள்ளை மாளிகைக்குச் சென்ற ஐரோப்பிய யூனியன் பருவநிலை மாற்றக் கமிஷன், பாரீஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரும்பினால் தொடரலாம் என்பதுபோல பேச்சுவார்த்தை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என வெள்ளை மாளிகையின் சார்பில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு சாதகமான விதிமுறைகள் அதில் இல்லாததால், அதிலிருந்து அமெரிக்கா வெளியேறும் முடிவை எடுத்ததாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close