Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவோம்’: வடகொரியாவுக்கு அமெரிக்கா பகிரங்க மிரட்டல்!

’வடகொரியாவை மொத்தமாக அழித்துவிடுவோம்’ என அமெரிக்கா வடகொரியாவுக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்கா

தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வடகொரியாவின் செயல்கள் உள்ளன. சர்வதேச அளவிலும், ஐ.நா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும், தன் நிலைப்பாட்டை இதுவரை வடகொரியா மாற்றிக்கொள்ளவே இல்லை. அந்நாட்டின்மீது பொருளாதாரத் தடை விதித்தும் அது கண்டுகொள்ளவில்லை. ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா சில நாள்களுக்கு முன்னர் மீண்டும் ஓர் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டது.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'வடகொரியா விடுக்கும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்று நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இன்று மீண்டும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியா தனது செயல்களை நிறுத்திக்கொள்ளாவிடில் அந்நாட்டையே அழித்துவிடுவோம்’ என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close