Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் சர்ச்சில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்..! ஒருவர் பலி

அமெரிக்காவில், டென்னிஸ் மாகாணத்தில் உள்ள சர்ச்சில் புகுந்த மர்ம நபர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். ஏழு பேர் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில், நாஷ்விலி என்ற பகுதியில் ஒரு சர்ச் உள்ளது. நேற்று காலை அந்த சர்ச்சில் பிரார்த்தனை நடந்தபோது, மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்தார். அவர், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.  இதனால், சர்ச்சில் இருந்தவர்கள் அலறியபடி அங்குமிங்கும் ஓடினர். இந்தத் திடீர் தாக்குதலில் ஒருவர் பலியானார். துப்பாக்கியால் சுட்டவர் உட்பட, ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close