Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகரிக்கும் நிலஅதிர்வுகள்... வெடிக்கும் தறுவாயில் இந்தோனேஷிய எரிமலை!

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில், எரிமலை வெடிக்கும் தறுவாயில் உள்ளதால், 35,000 பேர் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

bali
 

இந்தோனேஷியாவின் பாலி தீவில், ‘ஆகங்’ என்னும் எரிமலை எப்போது வேண்டுமானால் வெடிக்கும் நிலையில் உள்ளது. நேற்று அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை ஆகங் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில், 300 தடவை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

நில அதிர்வுகள் உணரப்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் எரிமலையியல் மற்றும் புவியியல் முன்னெச்சரிக்கை மையம், எரிமலை  அபாய எச்சரிக்கை (Alert level) லெவல் 4-க்கு உயர்த்தியுள்ளது. 

bali
 

இந்தோனேசியாவை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் ’ஆகங்’ எரிமலை, கடந்த 1963-ம் ஆண்டு வெடித்தது. சுமார் 20 கி.மீ உயரத்துக்கு சாம்பல் மேகம் சூழ்ந்தது. எரிமலையிலிருந்து 7.5 கிமீ தூரத்துக்கு எரிமலைக்குழம்பு ஆறாக ஓடியது. இந்தப் பேரிடரில் 1,100 பேர் உயிரிழந்தனர். 34 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வெடிக்கும் நிலையில் புகையை வெளியிட்டுவருகிறது ஆகங். இந்தோனேஷிய அரசு, உயிரிழப்பு மற்றும் சேதங்களைத் தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. எரிமலையைச் சுற்றி 12 கி.மீ தூரத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர். 
படங்கள் : Reuters

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close