Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியா-எகிப்து கூட்டு முயற்சி!

இந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்த எகிப்துடன் கைகோத்துள்ளது இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம்.

இந்திய சுற்றுலா

Representative image

எகிப்து நாட்டினரை அதிகளவில் இந்திய சுற்றுலாவுக்கு ஈர்ப்பதற்காக துபாயில் இந்திய சுற்றுலாத்துறை சார்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வின் எகிப்துக்கான இந்திய தூதரக அதிகாரி பட்டாச்சாரியா, இந்திய சுற்றுலாத்துறை குறித்த முன்னோட்ட அறிமுகம் கொடுத்தார். அவர் கூறுகையில், “இந்தியாவும், எகிப்தும் மக்கள் தொகையில் மிகப்பெரும் நாடுகளாகத் திகழ்பவை. ஆனால், தங்கள் திறனுக்கும் குறைவாகவே இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான சுற்றுலா மேம்பாடு உள்ளது’ என்றார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் சுற்றுலா வளங்கள் குறித்தும் இந்தியாவின் பெருமை, பழைமை ஆகியவை குறித்தும் இந்தியத் தூதர் பட்டாச்சாரியா விரிவாக அறிமுகப்படுத்தினார். துபாயில் நடந்த இவ்விழாவில் எகிப்து தூதரக அதிகாரிகள், சுற்றுலாத்துறை அமைச்சகத்தினர், சுற்றுலா அமைப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

2015-ம் ஆண்டை விட 2016-ம் ஆண்டு இந்திய சுற்றுலா வந்த எகிப்தியர்களின் எண்ணிக்கை நான்கு சதவிகிதம் அதிகரித்திருந்தது. அதுவே 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கான எகிப்து சுற்றுலாப் பயணிகளின் வருகை 12 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இவ்விழாவில் கூறப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close