Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''ஒரு கிலோ தக்காளியின் விலை பாகிஸ்தானில் என்ன தெரியுமா..?''

தக்காளி

சென்னையில், ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.25. ஆனால், பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனாலும், 'இந்தியாவிடமிருந்து தக்காளி வாங்க மாட்டோம்' என்று பாகிஸ்தான் உணவு அமைச்சர் அறிவித்துள்ளார். 

இந்தியாவைப் போலவே பாகிஸ்தான் மக்களும் உருளைக்கிழங்கு, தக்காளியை தங்கள் உணவில் முக்கியப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். பற்றாக்குறை காலங்களில், இந்த இரண்டு உணவுப் பொருள்களையும் இந்தியாவிலிருந்துதான் பாகிஸ்தான் இறக்குமதி செய்துவந்தது. தற்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், வாஹா எல்லை வழியாக கண்டெய்னர்களில் சரக்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், உணவுப்பொருள்களை அனுப்புவதில் இந்திய அரசு, அதிகக் கெடுபிடிகளை விதிக்காமல் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் அரசு நிர்வாகம் மேற்கொண்டுவரும் பிடிவாதம் காரணமாக, இந்தியாவிலிருந்து உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்வதற்கு நிறைய கட்டுப்பாடுகளை அந்நாடு விதித்துள்ளது. அதனால், பாகிஸ்தானில் இப்போது தக்காளிக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, ஏழை எளிய மக்களுக்கு நியாய விலையில் தக்காளி கிடைக்க வேண்டும் என்று கிலோ ரூ.130 முதல் ரூ.140-க்குள் விற்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், லாகூர் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் ஒரு கிலோ தக்காளி  ரூ.300-க்கு  விற்பனையாகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் உணவு அமைச்சர் ஷிக்கந்தர் ஹயாத் கூறுகையில், ''நாட்டில் இப்போது நிலவும் வெங்காயம் மற்றும் தக்காளி தட்டுப்பாடு, விரைவில் சரிசெய்யப்படும். இதற்காக, இந்தியாவிலிருந்து தக்காளி இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை. அதைச் செய்ய மாட்டோம். இந்தச் சூழ்நிலையை பாகிஸ்தான் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிந்து மாகாணத்திலி  ருந்து தக்காளி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார். அமைச்சரின் இந்த அறிவிப்பை லாகூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் அப்துல் பாஷித் வரவேற்றுள்ளார். 'பாகிஸ்தான் மக்களுக்கு உணவளிக்க, பாகிஸ்தானில் தேவையான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது' என்று அவர் தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால், தக்காளியின் விலை மேலும் உயரும் என்று லாகூர் மார்க்கெட் நிலவரம் தெரிவிக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close