Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குவைத்தில் 15 இந்தியர்களின் தூக்குத்தண்டனை ரத்து!

குவைத் நாட்டில் வசித்துவந்த 15 இந்தியர்களின் தூக்குத்தண்டனையை குவைத் மன்னர் ஜாபர் அல் அஹ்மத், ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார்.

சுஷ்மா ட்வீட்

குவைத் நாட்டில், இந்தியாவைச் சேர்ந்த பலர் பல்வேறு துறைகளில் வேலைசெய்துவருகின்றனர். சிலர், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அந்நாட்டுச் சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க, இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்திய அரசும் தொடர்ந்து இதுகுறித்து குவைத் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. 

இந்நிலையில், தற்போது குவைத் மன்னர் ஜாபர் அல் அஹ்மத் 15 இந்தியர்களின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 119 இந்தியர்களின் தண்டனையைக் குறைத்தும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குவைத் மன்னருக்கு ட்விட்டர்மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

குவைத் நாட்டுச் சிறையிலிருக்கும் இந்தியர்களை விடுவிக்க, வாய்ப்புள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close