Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையே வேண்டாம்!' - ட்விட்டரில் கடுகடுத்த ட்ரம்ப்

வடகொரியா - அமெரிக்க மத்தியில் இருக்கும் பிரச்னையை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் செக்கரட்டரி ஆஃப் ஸ்டேட் ரெக்ஸ் டில்லர்சன் முயன்றுள்ளார். இதற்கு ட்ரம்ப் ட்விட்டரில் கடுகடுத்துள்ளார். 

டொனால்ட் ட்ரம்ப்

வடகொரியா - அமெரிக்கா இடையே நிலவி வரும் பிரச்னையை சுமுகமாக தீர்க்க பலகட்ட முயற்சிகளும் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன. தற்போது வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். ஒரு பக்கம் ஆணு ஆயுதப் போர் மூளுமோ என்று ஐ.நா உள்ளிட்ட பலர் கவலை கொண்டு இந்த நேரத்தில், அமெரிக்காவின் செக்கரட்டரி ஆஃப் ஸ்டேட் ரெக்ஸ் டில்லர்சன் சில நாள்களுக்கு முன்னர், 'வடகொரியாவுடன் இன்னும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் இடத்தில்தான் இருக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் பிரச்னையை பேச்சுவார்த்தையின் மூலம் தீரக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாடு. அமைதியான முடிவுதான் உச்சபட்ச நோக்கம்' என்று தெரிவித்திருந்தார். 

இதற்கு ட்ரம்ப், 'ரெக்ஸ் டில்லர்சன் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம் என்று எடுக்கும் முயற்சியின் மூலம் நேரத்தைத்தான் வீணாக்குகிறார். உங்கள் நேரத்தை சேமித்துக் கொள்ளுங்கள் ரெக்ஸ், என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்' என்ற தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close