Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

நோபல் பரிசு

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்கும் வழங்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன. ஓர் இறையாண்மை நாட்டிலுள்ள அரசாங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், வரலாறு, தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள், அயல் உறவு துறைகள் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அனைத்துலக நீதிமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்டியின் முன்னாள் ஆலோசகர்கள் போன்றோர் மட்டுமே நோபல் பரிசு பெற தகுதியானவர்களின் பெயரை பரிந்துரைக்கமுடியும்.

இதன் அடிப்படையில் யாருக்கு விருது வழங்குவது என்கிற ஆய்வு  எட்டு மாதங்கள் வரை நடக்கும். 5 நபர்களின் தலைமையிலான நார்வே குழு மட்டுமின்றி சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இப்பரிசை அறிவித்து வழங்குவர்.

இந்தாண்டின் மருத்துவ படிப்புக்கான நோபல் பரிசு இன்று பிறபகல் 3 மணி அளவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், நாளை இயற்பியலுக்கும், அக்டோபர் 4-ம் தேதி வேதியலுக்குமான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close