Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்லை மீறிய பாகிஸ்தான் படைகள்: மூன்று சிறுவர்கள் பலி

இந்திய எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மூன்று சிறுவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

எல்லை

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் சில மாதங்களாகவே எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வந்த நிலையில் இன்று இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிராமங்களில் இந்திய ராணுவ நிலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் மூன்று சிறுவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படையின் மீது இந்திய ராணுவப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் படைகளின் ஊடுருவல்களையும் இந்தியப் படையினர் முறியடைத்து வருகின்றனர். இந்திய ராணுவ அதிகாரிகளின் தகவலின் பேரில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close