Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க துப்பாக்கிச் சூடு: ட்ரம்ப் இரங்கல்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 50 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அச்சம்பவம்  குறித்து தமது கண்டனத்தையும் இரங்கலையும் பதிவுசெய்தார். 

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள கேசினாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த இடத்துக்கு திடீரென துப்பாக்கியுடன் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் மோசமான துப்பாக்கிச் சூடாக இது பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், 'லாஸ் வேகாஸில் நடந்த சம்பவம் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. இது ஒரு தீய சக்தியின் செயல். எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கு இது சோகமான நாள். இதைப் போன்ற துயரச் சம்பவங்களின்போது அமெரிக்கா ஒன்றாக சேரும். அமெரிக்கா எப்போதும் அதைப் போன்று ஒன்றிணைந்துள்ளது. நமக்கு இந்த சம்பவத்தால் மிகக் கடுமையாக கோபம் வந்தாலும் நம் அன்புதான் நாம் யார் என்று உணர்த்துகிறது. உயிரிழந்தவர்களின் வலியை நம்மால் உணர முடிகிறது. இதைப் போன்ற ஒரு சம்பவத்தின்போது அர்த்தத்தை நாம் தேடுகிறோம். இருளில் ஒளியை தேடுகிறோம். ஆனால், அதற்கான பதில்கள் சுலபமாக கிடைப்பதில்லை. மிக இருண்ட ஒரு இடத்தில் கூட ஒரு சின்ன ஒளி இடத்தைப் பிரகாசமாக்கும். அது நிச்சயம் நடக்கும்' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close