Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: நவாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய உத்தரவு!

பனாமா கேட் ஊழல் விவகாரத்தில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய வேண்டுமென தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவாஸ் ஷெரிஃப்

பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்துவருகிறது. உலகிலுள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்துவருவதாக, 'பனாமா லீக்ஸ்' ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நவாஸ் ஷெரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகள் மற்றும் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து,  நவாஸின் பிரதமர் பதவியை இழக்கும் அளவுக்கு விவகாரம் தீவிரமடைந்தது.

இந்நிலையில், பனாமா ஊழல் வழக்கு விசாரணையில், நவாஸ் ஷெரீஃப் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய கணக்கியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னர் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்ததால், நவாஸின் மகன்கள் மற்றும் மகள் மீது பிடிவாரன்ட் பிறப்பிப்பதாக உத்தரவிட்டார் நீதிபதி. இதற்குப் பின்னர் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், நவாஸ் மீதுள்ள அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உரிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் நேற்றைய வழக்கு விசாரணையில், ஆஜராகாத நவாஸ் ஷெரீஃபின் மகன்கள் மற்றும் மகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு வழக்கு வருகிற 9-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close