Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குவைத் சிறையில் தவித்த 22 இந்தியர்கள் விடுதலை!

குவைத் சிறையில் வாடிவந்த 22 இந்தியர்களுக்கு விடுதலை அளிப்பதாக குவைத் நாடு அறிவித்துள்ளது.

கைதிகளுக்கு விடுதலை

குவைத் நாட்டில், இந்தியாவைச் சேர்ந்த பலர் பல்வேறு துறைகளில் வேலைசெய்துவருகின்றனர். சிலர், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அந்நாட்டுச் சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க, இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்திய அரசும் தொடர்ந்து இதுகுறித்து குவைத் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. 

இந்நிலையில், சமீபத்தில் குவைத் மன்னர் ஜாபர் அல் அஹ்மத் 15 இந்தியர்களின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 119 இந்தியர்களின் தண்டனையைக் குறைத்தும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இன்று சிறையில் தவித்து வந்த 22 இந்தியர்களுக்கு விடுதலை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலையாகும் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் இந்தியத் தூதரகம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்த விடுதலை குறித்த அதிகாரபூர்வமானத் தகவலை இந்தியத் தூதரகம் உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close