Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’அமெரிக்காவே துயரத்தில் இருக்கிறது’ - லாஸ் வேகாஸ் சம்பவம்குறித்து உருகிய ட்ரம்ப்

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அமெரிக்காவே துயரத்தில் இருப்பதாக, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். 


லாஸ் வேகாஸ் நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இசைநிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 58 பேர் உயிரிழந்தனர். மேலும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்க வரலாற்றில், மோசமான துப்பாக்கிச் சூடுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்கு உலக நாடுகள் பலவும் கண்டனமும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளன. 
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த லாஸ் வேகாஸ் நகருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சென்றார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ட்ரம்ப், சம்பவத்தின்போது மக்களைக் காக்கப் போராடியவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய ட்ரம்ப், ’இந்தச் சம்பவத்தால் அமெரிக்காவே சோகத்தில் இருக்கிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது சோகத்தில் அமெரிக்க மக்கள் அனைவரும் பங்கெடுத்துக்கொள்கிறோம்’ என்று பேசினார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 63 வயதான ஸ்டீபன் பெடாக், போலீஸார் வருகைக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்டார். இசைநிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு அருகில் இருந்த நட்சத்திர விடுதியின் 32-வது மாடியிலிருந்து கூட்டத்தினரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close