Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொருளாதாரத்தில் நோபல் பரிசுபெற்ற ஒரே பெண்!

2017-ம் ஆண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்கர் ரிச்சர்ட் தாலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எத்தனை பெண்கள் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பதை கூகுளில் தேடிப் பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது.  

elinor

1969ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற ஒரே பெண், எலினோர் ஆஸ்ட்ரோம் (Elinor Ostrom) தான். 2009-ம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற  இவர்,அமெரிக்காவைச் சேர்ந்தவர். 

பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று, இதுவரை நோபல் பரிசு வென்ற பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 1901-ம் ஆண்டிலிருந்து 2016  வரை 885 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதில் 48 பேர் பெண்கள். அதாவது, கடந்த 100 ஆண்டுகளில், நோபல் பரிசு பெற்றவர்களில் 5.4 சதவிகிதம் மட்டுமே  பெண்கள்.  இந்தப் பட்டியலில் உள்ள மேரி கியூரி, இரு முறை நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.1903-ம் ஆண்டில், இயற்பியலுக்கான நோபல் பரிசையும் 1911-ம் ஆண்டில், வேதியியலுக்கான நோபல் பரிசையும் பெற்றார். மேரி கியூரி, ஆஸ்ட்ரோம் உள்ளிட்ட 48 பேர் கொண்ட பட்டியல், இனி வரும் காலங்களில் நீளும் என்று நம்பலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close