Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கப் போர் விமானம்: வடகொரியாவுக்கு எச்சரிக்கையா?

கொரிய தீபகற்பத்தின் மேல் நேற்றிரவு பறந்த அமெரிக்கப் போர் விமானங்களால், மீண்டும் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

போர் விமானங்கள்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரியாவில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்தது வடகொரியா. 

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், உலக நாடுகள் பலவும் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால் வடகொரியாவுக்கு அத்தியாவசியப் பொருள்கள், எரிபொருள் உள்பட அனைத்து ஏற்றுமதிகளும் உலக நாடுகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் வடகொரிய அதிபர் விடுத்த அறிக்கை ஒன்றில், ’அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான் செயல்படுமானால், ஜப்பான் விரைவில் ஒரு நஷ்டத்தை சந்திக்க நேரிடும்’ எனக் குறிப்பிட்டு வெளியிட்டிருந்தார். வடகொரியாவின் இந்த அறிவிப்புக்கு சவால் விடுக்கும் வகையிலும் எச்சரிக்கை அனுப்பும் வகையிலும் நேற்று இரவு ஜப்பான் போர் விமானங்களுடன் இணைந்து, அமெரிக்கப் போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின்மீது பறந்தன. இந்த ஒத்திகையில், தென் கொரிய போர் விமானங்களும் ஈடுபட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close