Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எங்கள் இறையாண்மைக்கு மரியாதை அளியுங்கள்!’ - அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

சீன கடல் எல்லைப் பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல் கடந்து சென்றதற்கு சீனா தன்னுடைய கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

போர்க்கப்பல்

Representative image

சர்ச்சைக்குரிய தெற்கு சீனக் கடல் பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல் பயணித்ததால் சீனா கடும் கோபம் அடைந்துள்ளது. சீன வெளியுறவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் சீன எல்லைப் பகுதிக்குள் அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்று நுழைந்துள்ளது. அப்போது உடனடியாக எல்லைப் பகுதிக்கு விரைந்த சீன ராணுவக் கப்பல்கள் அமெரிக்கப் போர்க் கப்பலை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இச்சம்பவத்துக்குப் பின்னர் சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹுவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க சீன வரையறைகளை மீறியுள்ளது. மேலும் சர்வதேசச் சட்ட முறைகளையும் மீறிச் செயல்பட்டுள்ளது. இது சீன இறையாண்மையை அவமதிக்கும் செயலாகும். சீனாவின் பாதுகாப்பு விதிமுறைகளையும் இறையாண்மையையும் அமெரிக்கா மதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா வெளியிட்டுள்ள இச்செய்தி அமெரிக்காவாலும் உறுதிப்படுத்தப்பட்டால், இது அமெரிக்காவின் ‘சுதந்திரமான கப்பல் போக்குவரத்து’ திட்டத்தின் நான்காம் அம்சமாகக் கருதப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close