Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜப்பானில் பயங்கர வெள்ளம்:ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் (வீடியோ)

டோக்கியோ: ஜப்பானில் கடுமையாகப் பெய்துவரும் புயல்மழை காரணமாக முக்கிய நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுவருகிறார்கள். மக்கள் குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   
 
இந்நிலையில், ஜப்பானில் வீசி வரும் டைபூன் இடாவ் புயல் காரணமாகப்  பல்லாயிரக்கணக்கான மக்களை வீடுகளை விட்டு வெளியேறும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜப்பானில் உருவான இடாவ் புயலால் மத்திய டொச்சிகி பகுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை முதல் சுமார் 60 சென்டிமீட்டர் அளவு கடுமையான மழை பெய்தது.

புதன்கிழமை புயல் தீவிரமடைந்ததை தொடர்ந்து மழையால் ஜப்பான் கடும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளது. மேலும் புதன்கிழமை மாலை ஜப்பானின் கிழக்கு கடலில் புயல் கரையை கடந்ததைத்  தொடர்ந்தும் மழை பொழிந்து வருவதால், டொச்சிகி அதிகாரிகள் 90,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

இதுவரை புயலால் ஒருவர் பலியானதாகவும்,22 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மக்கள் மேலும் பலர் கடுமையான காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொட்டிவரும் கனமழை காரணமாக புகுஷிமா அணு உலையில், உலைக்கூடங்களை குளிர்விக்க பயன்படுத்தப்படும் பெரும் அளவிலான நீர் சேமிக்கும் தளம் மூழ்கி விட்டதால், அதில் இருந்த கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட நீர் கடலில் கலந்துள்ளதாக டோக்கியோவின் டெப்கோ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்தப் பாதிப்பு சுனாமி நிகழ்ந்ததைப் போல இருப்பதாகவும், மக்கள் மத்தியில் கதிவீச்சு அச்சம் பரவியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், இதுபோன்ற  பேரழிவின்போது அரசாங்கம் ஒன்றுபட்டு மக்களின் வாழ்க்கையைப்  பாதுகாப்பதில் முன்னுரிமை செலுத்த வேண்டும் எனவும், தற்போது அரசாங்கம் பாதுகாப்பு குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

 

    

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ