Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெர்மனியில் தஞ்சமடைந்துள்ள சிரிய அகதிகளுக்காக மசூதி கட்ட சவுதி நிதியுதவி!

ஜெர்மனியில் தஞ்சமடைந்துள்ள சிரிய அகதிகளுக்காக  200 மசூதிகளை கட்டித் தர சவுதி அரேபியா முன் வந்துள்ளது. இதற்காக 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை சவுதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக லெபனானை சேர்ந்த, அத் தியார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவில் இருந்து வெளியேறும் அகதிகளை சவுதி, பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் போன்ற பணக்கார வளைகுடா நாடுகள் ஏற்க முன்வரவில்லை. துருக்கி, லெபனான் போன்ற நாடுகள் குறைந்த அளவிலான அகதிகளை ஏற்று கொண்டுள்ளன. இதையடுத்து பெரும்பாலான சிரிய அகதிகள், ஐரோப்பிய நாடுகளில் சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.

குறிப்பாக ஜெர்மனி நாட்டில் ஏராளமான சிரிய அகதிகள் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் சவுதியில் தஞ்சமடைந்துள்ள சிரிய அகதிகளுக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது. இதில் சிரிய அகதிகளுக்கு 200 மசூதிகளை கட்டிக் கொடுத்து , அதில் அகதிகளை தங்க வைக்குமாறு ஜெர்மனி அரசை சவுதி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close