Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிரியா நாட்டு அகதிகளை ஏற்க மறுக்கும் சவூதி அரேபியா!

ரியாத்: சிரியாவில் இருந்து போர் அச்சத்தில் வெளியேறும் மக்களை அகதிகளாக ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள முன்வந்தபோதும் சவூதி அரேபியா ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது உலக நாடுகளில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  


மெக்காவில் ஹஜ் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குடில்கள்

 

சிரியாவில்  உள்நாட்டுப்போர் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை  சின்னாபின்னமாகியுள்ளது. அதனால் மரண பயத்தில் உள்ள அவர்களில் பலரும் தங்கள் வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில் அகதிகளாக மாறி,அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த அவலம் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள கொபானி நகரில், இருந்து உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் கடந்த ஆண்டு துருக்கிக்குச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் படகுகள் மூலமாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.இதில் அவ்வப்போது விபத்தும் நடந்து சிரியாவின் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது. 

இப்போதும் அகதிகள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிரியாவில் இருந்தும் ஈராக் நாட்டில் இருந்தும் வெளியேறிக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.இந்நிலையில் சிரியாவிற்கு அருகில் இருக்கும் சவூதி நாட்டில் 1 லட்சம் குளிரூட்டப்பட்ட குடில்கள் இருக்கின்றன.அவற்றில் சிரியா அகதிகளைத் தங்க வைக்கலாம்.ஆனால் அவ்வாறு எந்த நடவடிக்கையும் சவூதி செய்யாமல் வேடிக்கை பார்ப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ