Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்ணை காப்பாற்றுவதற்காக கொள்ளையனிடம் போராடி உயிர் துறந்த முதியவர்(வீடியோ)

பிரேசிலில் துப்பாக்கி முனையில் பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கொள்ளையனுடன் போராடியதில் முதியவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

               

 சாபாலோ நகரில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயம் அருகே பெண் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி வைத்திருந்த கொள்ளையன் ஒருவன் அந்த பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்றான். அந்த பெண் பணம் கொடுக்க மறுக்கவே, கொள்ளையன் அவரை கீழே தள்ளி பணத்தை பறிக்க முயற்சி செய்தான். சாலேயோரத்தில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.


 இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்த 61 வயது முதியவர் பிரான்சிஸ்கோ எராஸ்மா கொள்ளையன் மீது பாய்ந்து அவனை தாக்கினார். இந்த சமயத்தில் அந்த பெண் தப்பித்துவிட கொள்ளையனின் கோபம் எராஸ்மா மீது திரும்பியது. சற்றும் யோசிக்காமல் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் எராஸ்மாவை சுட்டு விட்டார், இதில் அவர் உயிரிழந்தார். அதேவேளையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கொள்ளையனையும் சுட்டு பிடித்தனர்.

பிடிபட்ட கொள்ளையனின் பெயர்  லூயீஸ் ஆண்டனியா சில்வா என்றும் பல்வேறு குற்றச்செயல்களுக்காக 22 வருடங்கள் சிறையில் இருந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. கொள்ளையனால் சுட்டுகொல்லப்பட்ட யாருமில்லாத அனாதையனா  பிரான்சிஸ்கோ எரோஸ்மாவை தகுந்த மரியாதையுடன்  அடக்கம் செய்ய வேண்டுமென சா பாலோ நகர மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து பிரான்சிஸ்கோ எராஸ்மா தக்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.





 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ