Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமர் மோடியின் அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஃபேஸ்புக் தலைமையகம்!

மெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃ பேஸ்புக் தலைமையகத்துக்கு பிரதமர் மோடி இந்த மாதம் 27ஆம் தேதி செல்கிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் உடன் இணைந்து டவுன்ஹால் நிகழ்ச்சியில் கலந்துரையாடுகிறார்.

இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இன்று அறிவித்தார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, '' இந்திய பிரதமர் ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வருகை தந்து டவுன்ஹால் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனால் மோடியிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை அனுப்புங்கள்'' என கூறியுள்ளார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடியை சந்தித்த அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று மோடி வரும் 27ஆம் தேதி ஃபேஸ்புக் தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ நகர் அருகேயுள்ள மென்லோ பார்க்கிற்கு செல்கிறார். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு டவுன் ஹால் நிகழ்ச்சியில் ஃ பேஸ்புக் பயன்படுத்துபவர்களிடம் கலந்துரையாடுகிறார்.



 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ