Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெக்கா மசூதி விபத்து: காயமடைந்தவர்களை சந்தித்து சவுதி மன்னர் ஆறுதல்!

ஜெட்டா: விபத்து நடந்த மெக்கா பெரிய மசூதியில் சவுதி மன்னர் சல்மான் ஆய்வு நடத்தி காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால் தொழுகை முடிந்த பிறகு அவர்கள் மசூதிக்குள்ளேயே இருந்தனர்.

அந்த நேரத்தில் மசூதியின் கட்டட விரிவாக்கப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் இரு இந்திய பெண்கள் உள்பட 107 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட15 இந்தியர்கள் உள்பட 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக மெக்கா நகரின் அமிரும் சவூதி இளசரசருமான அல் ஃபைசல் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியா நாட்டின் மன்னராக பதவி வகிக்கும் சல்மான், விபத்து நிகழந்த மெக்கா பெரிய மசூதிக்கு இன்று நேரில் சென்று சேதம் பற்றிய விபரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார். அதன்பின் அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ