Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விண்வெளியில் 879 நாள் இருந்து பூமிக்கு திரும்பிய சாதனை வீரர்! (ஆச்சரிய வீடியோ)

ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர் கென்னடி படல்கா, கசாக் விண்வெளி வீரர் ஐட்யன் அமெடெவ் மற்றும் டேனிஷ் விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ் இவர்களே திட்டமிட்டபடி இன்று கசாக் புல்வெளியில் தரையிறங்கினர்.



கென்னடி படல்கா 879 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து விண்வெளியில் அதிக நாள் இருந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

படல்கா 5 வெவ்வேறான பயணங்களின் மூலம் விண்வெளியில் 879 நாட்கள் இருந்து உள்ளார்.

இதற்கு முன் ரஷ்ய விண்வெளி வீரர் செர்ஜி கிரிகேலேவ் என்பவர், 803 நாட்கள் 9 மணி நேரம் 41 நிமிடங்கள் விண்வெளி நிலையத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரஷ்ய வெண்வெளி ஆராய்ச்சி நிறுவன செய்தி தொடர்பாளர் ரோஸ்கோச்மோஸ் கூறுகையில், தெரிவு செய்யப்பட்ட இடத்தில் இறங்கி உள்ளனர். எல்லாம் நல்லவிதமாக நடந்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close