Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அழகியாக ஜார்ஜியா அழகி பெட்டி கேன்ட்ரெல் தேர்வு (வீடியோ)

நியூயார்க்: அமெரிக்காவின் அழகியாக, ஜார்ஜியா அழகி பெட்டி கேன்ட்ரெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில் நடைபெற்ற,அமெரிக்கா அழகி 2016 போட்டிக்கான இறுதிச் சுற்றில் பங்கேற்ற 51 போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி இந்தப்  பட்டத்தை  வென்றுள்ளார் பெட்டி கேன்ட்ரெல்.இவருக்கு வயது 21.

நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அட்லாண்டிக் நகரின் போர்ட்வாக் ஹாலில் நேற்றிரவு(ஞாயிறு) நடைபெற்ற இந்தப்  போட்டி நாடு முழுவதும் தொலைக்காட்சி மூலமாக நேரலை செய்யப்பட்டது.கடந்த வாரமே இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருந்த பெட்டி கேன்ட்ரெல்,  ஓபெரா பாட்டு பாடும் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி அமெரிக்காவின் அழகியாகத்  தேர்வானார்.

நேற்றுவரை அமெரிக்க அழகியாக இருந்த கிரா கசான்ட்ஸேவ் அவருக்கு அழகு ராணிக்கான கிரீடத்தை சூட்டினார்.

 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ