Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா. அறிக்கை 16ல் வெளியீடு!

ஐ.நா.: இலங்கை போரின்போது நடந்த மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை 16ஆம் தேதி வெளியிடப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜீத் அல் ஜூசைன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''இலங்கையில் நடந்த போரின்போது நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் மிகவும் கவலை தரும் உண்மைகள் தெரிய வந்திருக்கிறது. இந்த அறிக்கையை வரும் 16ஆம் தேதி வெளியிட உள்ளேன்.

மேலும், அத்துடன் எனது பரிந்துரையையும் வெளியிட இருக்கிறேன். இலங்கையில் மீண்டும் தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக ஆழமான அமைப்பு மாற்றம் தேவை. இலங்கையில் அமைதி திரும்ப ஐ.நா. கடுமையாக பாடுபட்டது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மக்களுக்கும், நற்பெயருக்கும் பொறுப்பு வாய்ந்தது'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ