Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்பாவி சுற்றுலா பயணிகள் 12 பேரை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை!

எகிப்தில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 12 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தீவிரவாதிகள் என நினைத்து பாலைவனப் பகுதி ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனங்கள் மீது எகிப்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 

இதில் மெக்ஸிகோவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

லிபியாவுடனான எல்லையில், தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இவர்கள் சென்ற வாகனங்கள் நுழைந்தன என்று எகிப்து அரசு கூறியுள்ளது.

தங்கள் நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக மெக்ஸிகோ அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகள் எங்கெங்கே போகிறார்கள் என்ற விவரம் பாதுகாப்பு அதிகாரிகளிடம் முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தது என்றும், அவர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர் என்றும் மெக்ஸிகோ அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இதனை எகிப்து அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ