Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள்: வரைவு அறிக்கையை ஏற்றது ஐ.நா.!

நியூயார்க்: பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான வரைவு அறிக்கையை ஐ.நா. ஏற்றுக் கொண்டது.

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான வரைவு அறிக்கையை ஐ.நா. ஏற்றுக் கொண்டு உள்ளது. இந்த வரைவு அறிக்கை குறித்து இன்று (15 ஆம் தேதி) தொடங்கவுள்ள ஐ.நா.வின் 70வது கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கோரும் இந்தியாவின் நீண்ட நாளைய கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக, இந்த நடவடிக்கை அமையும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்த வரைவு அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது, இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. இந்த பிரச்னையை, வரைவு அறிக்கை அளவில் முன்னெடுத்துச் சென்ற ஐ.நா. பொதுச் சபை தலைவர் சாம் குடேஸாவையும், அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை குறித்த குழுவின் தலைவர் கோர்ட்னே ராத்ராயையும் பாராட்டுகிறோம்" என்று கூறப்பட்டு உள்ளது..

ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி கூறும்போது, ''ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான வரைவு அறிக்கையை ஒருமித்த கருத்து அடிப்படையில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டிருப்பது, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். ஐ.நா.வின் நடப்புக் கூட்டத்தொடரில், சீர்திருத்தங்கள் தொடர்பான எங்களுடைய கருத்துகளை முன்வைப்பதற்கு, இந்த வரைவு அறிக்கை வழிகாட்டியாய் அமையும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ