Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஐயா... எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்'!- விக்னேஸ்வரன் காலில் விழுந்து பெண்கள் கதறல்! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம்: "ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கால்களை கட்டிப்பிடித்தவாறு தமிழர் பெண்கள் கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம் நெஞ்சை உருக வைத்தது.



                                                                                                                                            நன்றி- லங்காஸ்ரீ

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி கிளிநொச்சியில் தொடங்கிய நடைபயணம் நேற்று நிறைவுக்கு வந்த நிலையில், குறித்த நடை பயணத்தில் பங்கெடுத்த காணாமல்போனவர்களின் உறவினர்களை முதலமைச்சர் சந்தித்து பேசினர். அப்போது, அவர்களை சந்திக்க வந்த பெண்கள் வாசலிலேயே அழுதவாறு வந்து முதலமைச்சரின் கால்களை பிடித்தவாறு கதறியழுதனர்.
 

அப்போது முதலமைச்சர், அழுதவர்களுக்கு ஆறுதல் கூற முடியாத நிலையில் தளதளத்த குரலில் ஆறுதல் படுத்தினார்.

அப்போது பேசிய முதலமைச்சர், இலங்கையின் ஆட்சியாளர்களும், சர்வதேசமும் அரசியல்வாதிகள் போன்று செயற்படுகின்றன. இதனாலேயே பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அண்மையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் நிஷா பிஷ்வாலை சந்தித்த போது அவர்கள் சார்பில் உள்ளக விசாரணைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நாம் சர்வதேச கண்காணிப்புடன் அது நடக்கவேண்டும் என கேட்டிருந்தோம். ஆனால் அதற்குப் பதில் கிடைக்கவில்லை.
 

இந்நிலையில். இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்கள் கொடுத்த வெற்றிக்கு பதிலாக செய்ய முடிந்தவற்றையும் கூட செய்யவில்லை. குறிப்பாக காணமல்போனவர்கள் விவகாரம், படைக்குறைப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், நில விவகாரம் உள்ளிட்டவை அவ்வாறே. எனவே நாம் எமக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களுடைய பிரச்னைகளை உணர்ந்துள்ளோம். இதனாலேயே இரு தீர்மானங்களை மாகாண சபையில் நிறைவேற்றியுள்ளோம் என கூறினார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ