Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கையில் முழுமையான சீரமைப்பு தேவை: ஐ.நா.

ஐ.நா.: இலங்கை நீதித்துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் முழுமையான சீரமைப்பு தேவை என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய சிறப்பு அறிவிப்பாளர் பேப்லோ டி கிரேஃப் கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த போரின்போது, மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை அறிக்கை நாளை (16ஆம் தேதி) வெளியிட இருக்கிறது.

இந்நிலையில், இன்று ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைய கூட்டத் தொடர் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அதன் சிறப்பு அறிவிப்பாளர் பேப்லோ டி கிரேஃப் கூறுகையில், ''இலங்கையில் பொதுவான அமைதி, அனைத்து மக்களுக்கும் உரிமையை அளிக்கும் திறன் இலங்கை அரசுக்கு உண்டு.

இலங்கை ராணுவம், காவல்துறை, உளவுத்துறைகளில் ஆழமான சீர்திருத்தம் தேவைப்படுகிறது. அதேபோல், அங்கு சுதந்திரமான உண்மை கண்டறியும் அமைப்பும் மிகவும் அவசியமானது. இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்த வேண்டும்.

அதேபோல், போரின் போது காணாமல் போனவர்களின் நிலைமை என்னவென்று ஆராயப்பட வேண்டும். நிலங்களை இழந்த தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். ராணுவ துன்புறுத்தல் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக உளவியல் ஆதரவு அளிக்கப்பட வேண்டும். இவற்றை செய்ய வேண்டுமானால், முழு மனதோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரை மனதோடு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் தீர்வு கிடைக்காது'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்