Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன்: மார்க் ஸகர்பெர்க் உறுதி!

ற்போது ஃபேஸ்புக் பக்கத்தில் லைக் செய்வதற்கும், டேக் செய்வதற்கும் வசதிகள் உள்ளன. ஆனால் அதில் டிஸ்லைக் செய்வதற்கு தனியாக பட்டன் இல்லை. விரைவில் டிஸ்லைக் பட்டன் கொண்டு வரும் முடிவில் இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் தலைமையகத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது அவர் கூறுகையில்,' எல்லா நிகழ்வுகளுமே இனிமையானதாக இருப்பதில்லை. தற்போது நடந்து வரும் சிரிய அகதிகளின் இடம் பெயர்வு போன்ற நிகழ்வுகளை மக்கள் விரும்புவதில்லை. இது போன்ற நிகழ்வுகளை மக்கள் பார்க்க கூட விரும்ப மாட்டார்கள்.

இதனால் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப விரைவில் ஃபேஸ்புக் தளத்தில் டிஸ்லைக் பட்டன் கொண்டு வருவதற்கான  தொழில்நுட்பரீதியிலான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. பரிச்சாத்திய முயற்சிக்கு பின் டிஸ்லைக் பட்டன் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்'' என்றார்.

ஃபேஸ்புக் பக்கத்தை பொறுத்தவரை லைக் பட்டன் மிகவும் பாப்புலர். சான்பிரான்சிஸ்கோ மென்லோ பார்க்கில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தின் முகப்பில் 'தம்ஸ்அப்' போல உள்ள லைக் பட்டன் நிறுவப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close