Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போர்க்குற்றம்: இலங்கை அரசு, புலிகள் மீது ஐ.நா. அறிக்கையில் குற்றச்சாட்டு!

ஜெனிவா: இலங்கை அரசும்,  விடுதலைப்புலிகள் அமைப்பும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருக்கின்றன என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது பல்வேறு மனித உரிமைகள் மீறல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு விசாரணை நடத்தியது.

இந்த விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு ஆணையர் ஜீத் அல் ஜூசேன் இன்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், "இலங்கையில் நடந்த போரின் போது அந்நாட்டு அரசும், விடுதலைப்புலிகள் இயக்கமும் பல்வேறு போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளன. இருதரப்பும் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர். இலங்கை ராணுவம், கடற்படை, சிஐடி ஆகிய தரப்பினர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டோரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதேபோல், சர்வதேச அளவில் இலங்கையில்தான் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பூலித்தேவன், நடேசன், அவரது மனைவி ஆகியோரும் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பகத்தன்மையாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த, உள்நாட்டு நீதிமன்றம் உகந்ததல்ல. சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

நாங்கள் போரின் போது நடந்த குற்றங்கள் குறித்து, இலங்கையில் மக்களை சந்தித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு ஒத்துழைக்கவில்லை'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ