Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐநா வெளியிட்டது போர்க்குற்ற விசாரணை அறிக்கை இல்லை: இலங்கை அரசு

கொழும்பு: ஐ.நா. வெளியிட்டிருப்பது மனித உரிமை மீறல் குறித்த அறிக்கையே தவிர, போர்க்குற்ற விசாரணை அறிக்கை இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில், இலங்கையில் நடந்த போரின் போது, இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளிட்டோரை ராணுவம் கொன்றதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள இலங்கை அரசு, ''ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையே தவிர, குற்ற விசாரணை அறிக்கை இல்லை. இதுகுறித்த எங்களது பதிலை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்துக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பியுள்ளோம்.

அதேபோல், இந்தாண்டு ஜனவரி 8ஆம் தேதிக்குப் பின்னர் இடம்பெற்ற மாற்றங்கள் பற்றி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது'' எனக் கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ