Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெருமையுடன் ஆசிரியரிடம் சென்ற மாணவன் சிறுமையை சந்தித்த அவலம்!

லாரம் டைம்பீஸ் கண்டுபிடித்த மாணவனை வெடிகுண்டு தயாரித்ததாக கைது செய்த அமெரிக்க போலீசுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கிளாரி கிளிண்டன் , ரஸல் சிம்மன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் அமெரிக்க போலீஸ் அதிகாரிகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் 'ஸ்டான்ட் வித் அகமது ' என்ற ஹேஸ்டாக்,  ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களில் உருவானது.

கைது செய்யப்பட்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று அமெரிக்க போலீஸ் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, மாணவன் அகமது முகமதுவை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ' கூல் கிளாக் அகமது, அதனை வெள்ளை மாளிகைக்கு கொண்டு வந்து என்னிடம் காட்ட முடியுமா?   உனது வெள்ளை மாளிகை வருகை அறிவியலை கற்றுகொள்ள குழந்தைகளை ஊக்குவிக்கும்.உங்களை போன்றவர்கள்தான் அமெரிக்காவை உன்னத நிலைக்கு மாற்றியுள்ளனர் '' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பார்க்கும் மாணவன் அகமது முகமதுவை ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 'அகமது உன்னை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்' என்றும் ஜக்கர்பர்க் தனது பதிவில் கூறியுள்ளார். 

டெக்சாஸ் மாகாணத்தின் இர்விங் நகரில் உள்ள பள்ளியில் படித்து வரும் 14 வயது மாணவன் முகமது அகமது, தான் கண்டுபிடித்த  கடிகாரத்தை ஆசிரியர்களிடம் பெருமையுடன் காட்டுவதற்காக பள்ளிக்கு கொண்டு வந்துள்ளான். அதனை பார்த்த ஆசிரியர் ஒருவர் 'டைம்பாம்' என்று  தவறாக கருதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து இர்விங் போலீசார், சந்தேகத்துக்குரிய பொருளை பள்ளிக்கு கொண்டு வந்ததாக கூறி அகமதுவை கைது செய்தனர்.  இதற்கு உலகம் முழுக்க இருந்து எதிர்ப்பு கிளம்ப, முகமதுவுக்கு ஆதரவு குவிந்தது. இதையடுத்து அகமது முகமது மீது பதியப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்படுமென்று இர்விங் நகர தலைமை போலீஸ் அதிகாரி, லேரி பாயிட் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ