Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல்: 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளை, அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமானப்படை தளத்தை கைப்பற்றும் நோக்கில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் அசிம் பாஜ்வா கூறும்போது, ''பாகிஸ்தானில் உள்ள படாபெர் விமானப்படை தளத்தை இன்று அதிகாலை முற்றுகையிட்ட சுமார் 10 தீவிரவாதிகள் அங்குள்ள காவல்சாவடி மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகின்றது" என்று தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ