Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயங்கர தீ விபத்தில் சிக்கிய நர்சரி பள்ளிக் குழந்தைகள் ! (வீடியோ)

பெய்ஜிங்: சீனாவில் நர்சரி பள்ளியொன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கிய குழந்தைகளை ஜன்னல் வழியே தூக்கியெறிந்து காப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள நின்ங்டே நகரில் உள்ள காகித பூக்கடையில் கடந்த புதன் கிழமை தீப்பிடித்துக் கொண்டது. தீ  அருகில் இருக்கும் நர்சரி பள்ளி ஒன்றின் மீதும் பரவி பற்றிக்கொண்டது. இதில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.

 உடனடியாக வெளியே பெரிய கம்பளி போர்வையை பிடித்து கொள்ள பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள்  பள்ளிக் கட்டிட ஜன்னலை உடைத்து ஜன்னல் வழியே  குழந்தைகளை கம்பளி போர்வை மீது தூக்கி எறிந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் ஏணியைப்  பயன்படுத்தி குழந்தைகளைக்  காப்பாற்றினர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close